என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "சுகாதார ஆய்வாளர்"
- உலக பூமி தினம் கொண்டாடப்பட்டது.
- சுகாதார ஆய்வாளர் பாண்டிச்செல்வம் நன்றி கூறினார்.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை நகராட்சி சார்பில் உலக பூமி தினத்தை முன்னிட்டு "என் குப்பை என் நீர்நிலை கூட்டு பொறுப்பு" உறுதிமொழி எடுத்தல், துப்புரவு பணி மற்றும் மரக்கன்று நடும் நிகழ்ச்சிகள் நடந்தன.
செட்டிகுளத்தில் நகராட்சி தலைவர்-முன்னாள் எம்.எல்.ஏ. மாரியப்பன் கென்னடி தலைமையில் உறுதிமொழி எடுக்கப்பட்டு மரக்கன்றுகள் நடவுசெய்யப்பட்டது. துணைத்தலைவர் பாலசுந்தரம் முன்னிலை வகித்தார்.
கவுன்சிலர் லதாமணிகண்டன் மற்றும் தன்னார்வலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நடவு செய்தனர். தூய்மைப்பணி மேற்பார்வையாளர் கார்த்திக், தூய்மை இந்தியா திட்ட மேற்பார்வையாளர் காயத்ரி மற்றும் பரப்புரையாளர்கள், தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
சுகாதார ஆய்வாளர் பாண்டிச்செல்வம் நன்றி கூறினார்.
- தமிழ்நாடு அனைத்து சுகாதார ஆய்வாளர் சங்கத்தின் மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
- ஆய்வாளர் பணியிடங்களை நிரப்பப்படும் .
வேதாரண்யம்:
வேதாரண்யம் தாலுக்கா தலைஞாயிறு தமிழ்நாடு அனைத்து சுகாதார ஆய்வாளர் சங்கத்தின் மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாநில தலைவர் நாகை செல்லம் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் செந்தில்குமார், மாவட்ட செயலாளர் சுத்தானந்த கணேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஒன்றிய நகர மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் சட்டமன்றத்தில் பொது சுகாதாரத்துறை ஆய்வாளர் பணியிடங்களை நிரப்பப்படும் என்ற அறிவிப்பை மக்கள் நல்வாழ்த்துவுத்துறை அமைச்சர் வெளியிட்டுள்ளார்கள்.
இந்த அறிவிப்பை தமிழ்நாடு அணைத்து சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் அலுவலர்கள் சங்கம் வரவேற்கிறது.
மேலும் தமிழக முதல்வர், மக்கள் நல்வாழ்த்துவுத்துறை அமைச்சர், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்த்துவுத்துறை முதன்மை செயலர் மற்றும் பொது சுகாதார துறை இயக்குநர் சங்கத்தின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
மேலும் இப்பணியிடங்கள் நிரப்பும்போது கொரோனா அதிகம் பரவி வந்த கால கட்டங்களில் தன் உயிரை பொருட்படுத்தாமல் பணியாற்றிய தற்காலிக சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் மக்களை தேடி மருத்துவ திட்டத்தில் பணியாற்றி வரும் சுகாதார ஆய்வாளர்களுக்கு முன்னுரிமை அளித்து அவர்களுக்கு இந்த பணியை வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவே ற்றபட்டன.
- சுகாதார ஆய்வாளரிடம் ரூ.80 ஆயிரம் நூதன முறையில் பணம் எடுக்கப்பட்டதாக குறுஞ்செய்தி வந்தது.
- அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் அருகே வட்டான் வலசை கிராமத்தைச் சேர்ந்தவர் சச்சின் டெண்டுல்கர் (வயது 24). இவர் உச்சிப்புளியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுகாதார ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த 18-ந்தேதி ஒரு மொபைல் எண்ணில் இருந்து அவர் சம்பள வரவு, செலவு வைத்திருக்கும் வங்கி கணக்கில் பான் கார்டு பதிவு செய்யாமல் இருப்பதினால், வங்கி கணக்கினை நிறுத்தம் செய்ய போவதாக குறுஞ்செய்தி வந்துள்ளது.
இதனை பார்த்த சச்சின் டெண்டுல்கர் அதனுடன் வந்த அப்டேட் செய்ய கொடுக்கப்பட்ட லிங்கை இணைபபு செய்து, அதில் கேட்கப்பட்ட சுய விபரம் மற்றும் ஓ.டி.பி. எண்ணினை தொடர்ந்து 3 முறை பதிவு செய்தார்.
இதையடுத்து அடுத்த அவரது வங்கி கணக்கில் இருந்து அடுத்தடுத்து ரூ.79 ஆயிரத்து 998 பணம் எடுக்கப்பட்டதாக குறுஞ்செய்தி வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் இதுபற்றி ராமநாதபுரம் கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆரணி நகரில் எங்கும் குப்பை கூளமாக இருப்பதாக நேற்று முன்தினம் ‘தினத்தந்தி’யில் நகர்வலம் பகுதியில் படத்துடன் செய்தி வெளியானது. இதுதொடர்பாக அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் நேற்று நகராட்சிகளின் மண்டல நிர்வாக இயக்குனர் விஜயகுமார், நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) ஸ்டான்லிபாபு, பொறியாளர் கணேசன், உதவி பொறியாளர் தேவநாதன், சுகாதார அலுவலர் (பொறுப்பு) பழனிச்சாமி மற்றும் அலுவலர்களுடன் நகரில் குப்பைகள் தேங்கி கிடக்கும் பகுதிகளுக்கு அழைத்து சென்று ஆய்வு மேற்கொண்டார்.
அதைத் தொடர்ந்து ஆரணி நகராட்சி அலுவலகத்தில் நகராட்சிகளின் மண்டல நிர்வாக இயக்குனர் தலைமையில், நகராட்சியில் பணிபுரியும் அனைத்து அலுவலர்கள், பணியாளர்களுடன் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தின் முடிவில் அமைச்சர் மற்றும் அதிகாரிகள் யார் போன் செய்தாலும் பதில் அளிக்காத சுகாதார ஆய்வாளர் ஜெயச்சந்திரனை பணியிடை நீக்கம் செய்தும், மேலும் சுகாதார ஆய்வாளர் பாலாஜி, துப்புரவு பணி மேற்பார்வையாளர்கள் வாசுதேவன், மாசிலாமணி, ஜோதிவேலு, வருவாய் ஆய்வாளர் தேவராஜ், குத்தகை இனங்களை முறையாக வசூலிக்காத காரணத்தால் பில் கலெக்டர்கள் சரவணன், விஜயபிரபாகரன், குப்பைகளை லாரி மூலம் முறையாக அகற்றாத டிரைவர் இந்திராபாண்டியன் ஆகிய 8 பேருக்கு நோட்டீஸ் (மெமோ) வழங்கப்பட்டது. சரியான விளக்கம் அளிக்கவில்லையெனில் இவர்கள் மீதும் பணியிடை நீக்கம்(சஸ்பெண்டு) நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என நகராட்சிகளின் மண்டல நிர்வாக இயக்குனர் விஜயகுமார் கூறினார்.
மேலும் நகராட்சி துப்புரவுப் பணியாளர்கள் குறைவான எண்ணிக்கையில் இருப்பதாலும், அதிலும் வயது முதிர்ந்தோர் அதிகம் இருப்பதாலும் நகரில் எங்கு பார்த்தாலும் குப்பைகள் காணப்படுவதால் அவற்றை அள்ளுவதற்காக ஆற்காடு, ராணிப்பேட்டை, செய்யாறு ஆகிய நகராட்சி பகுதிகளில் இருந்து துப்புரவு பணியாளர்கள் வாகனத்துடன் வருகை தந்து குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்